தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ள நாள் மற்றும் பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்களின் முதல்வர் திட்டம் தருமபுரி மாவட்டத்தில் 11.07.2024 அன்று முதல் ஊரக பகுதிகளில் துவக்கி வைக்கப்பட்டது. அது போல் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கீழ்கண்ட அட்டவணைப்படி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 09.00 முதல் பிற்பகல் 03.30 மணி வரை நடைபெற உள்ளது.
நாள் மற்றும் முகாம் நடைபெறும் இடம்
19.07.2024 தூத்துக்குடி பஞ்சாயத்து அலுவலகம், கோரம்பள்ளம்
19.07.2024 கருங்குளம் அம்மா ஜிம் பார்க், கீழவல்லநாடு
20.07.2024 தூத்துக்குடி சோனா மஹால், தாளமுத்து நகர், பிள்ளையார் கோவில் எதிரில்
20.07.2024 கருங்குளம் தர்ம தேவதை கலையரங்கம், எம்.புதுகிராமம்
20.07.2024 ஆழ்வார்திருநகரி ஏ.எம்.எஸ். கல்யாண மண்டபம்
26.07.2024 கோவில்பட்டி மகிழ்ச்சி அரங்கம், லிங்கம்பட்டி
27.07.2024 கோவில்பட்டி சமுதாய நலக்கூடம், சாத்துரப்பநாயக்கன்பட்டி
29.07.2024 கோவில்பட்டி கிராம சேவை மையம், நாலாட்டின்புதூர்
29.07.2024 கயத்தார் கிராம சேவை மையம், ஆத்திகுளம்
30.07.2024 கோவில்பட்டி சமுதாய நலக்கூடம், இனாம்மணியாச்சி
30.07.2024 கயத்தார் சமுதாய நலக்கூடம், அகிலாண்டபுரம்
31.07.2024 கோவில்பட்டி சமுதாய நலக்கூடம், விஜயாபுரி
31.07.2024 கயத்தார் அசன கூடம், காமநாயக்கன்பட்டி
01.08.2024 கயத்தார் பொன்னுசாமி நாடார் மணிமண்டபம், செட்டிக்குறிச்சி
01.08.2024 கோவில்பட்டி கம்மவர் மஹால், கீழஈரால்
02.08.2024 கயத்தார் சமுதாய நலக்கூடம், ராஜாபுதுக்குடி
02.08.2024 விளாத்திகுளம் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி, குளத்தூர்
03.08.2024 விளாத்திகுளம் சமுதாய நலக்கூடம்,சூரங்குடி
06.08.2024 கோவில்பட்டி சமுதாய நலக்கூடம், சிதம்பராபுரம்
06.08.2024 கயத்தார் சமுhய நலக்கூடம், பொம்மையாபுரம்
07.08.2024 விளாத்திகுளம் சமுதாய நலக்கூடம், பிள்ளையார்நத்தம்
07.08.2024 புதூர் கிராம சேவை மையம், மாவில்பட்டி
08.08.2024 கயத்தார் சமுதாய நலக்கூடம், வானரமுட்டி
08.08.2024 புதூர் சமுதாய நலக்கூடம், மாசார்பட்டி
09.08.2024 புதூர் சமுதாய நலக்கூடம், தப்பாத்தி
10.08.2024 விளாத்திகுளம் அரசு மேல்நிலைபள்ளி, சிவஞானபுரம்
10.08.2024 புதூர் சமுதாய நலக்கூடம், மேலகல்லூரணி
12.08.2024 கயத்தார் கே. சிதம்பராபுரம் தாத்தா கோவில் ஹால்
12.08.2024 ஓட்டப்பிடாரம் நாடார் திருமண மண்டபம், பசுவந்தனை
12.08.2024 விளாத்திகுளம் கிராம சேவை மையம், அயன்பொம்மையாபுரம்
13.08.2024 கோவில்பட்டி சமுதாய நலக்கூடம், ஊத்துப்பட்டி
13.08.2024 புதூர் சமுதாய நலக்கூடம், ராமசந்திராபுரம்
மேற்கண்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளை பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் துறை மூலம் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை, சமூக நலத்துறை மூலம் புதுமைப்பெண் திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தமிழ் புதல்வன் பாதுகாப்புத் திட்டம், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை மூலம் காப்பீட்டு அட்டை போன்ற 44 வகையான சேவைகளை பெறுவதற்கான கோரிக்கை மனுக்களை மேற்குறிப்பிட்ட ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம். முகாமிற்கு வருபவர்கள் ஆதார் அட்டை, வசிப்பிட சான்றிதல் மற்றும் தொடர்புடைய ஆதார ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களை கொண்டு வர நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


