1806 – 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
1892 – மொண்ட் பிளாங்க்கில் ஏரி ஒன்று பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1918 – ஜப்பானின் “கவாச்சி” என்ற போர்க்கப்பல் ஹொன்ஷூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் கொல்லப்பட்டனர்.
1932 – நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1975 – சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1993 – ஜப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.
2007 – வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.


