திருச்செந்தூரில் இருந்து கொல்லத்துக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என்று செய்துங்கநல்லூரில் தவ்ஹித் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்துங்கநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளையின் சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் கிளை செயலாளர் அப்துல் வஹாப், மாவட்ட நிர்வாகிகள் தமிமுல் அன்சாரி, சிக்கந்தர், இமாம் பரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கோவை ரஹ்மத் துல்லாஹ் மார்க்க விளக்கவுரையாற்றினார். அல் மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசல் மாணவ மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.
முஸ்லீம்களுக்கு இட ஓதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், செய்துங்கநல்லூரில் நாய் மற்றும் பன்றிகளை ஒழிக்க வேண்டும், சீரான குடிதண்ணீர் வழங்க வேண்டும், மெயின்ரோட்டில் தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும், புதிய குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு, குடிதண்ணீர் வசதி செய்து தரவேண்டும், , கொங்கராயகுறிச்சிக்கு புதிய பாலம் வழியாக பஸ் இயக்க வேண்டும், திருச்செந்தூரில் இருந்து கொல்லத்திற்கும், மும்பைக்கும், சென்னைக்கும் புதிய ரயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் கிளைத்தலைவர் சாதிக், துணைத்தலைவர் அப்துல் கனி, துணைச்செயலளர் கரீம் பாஷா, பொருளாளர் செய்யது இப்பராஹிம், ஹன்யா, ஆவின் காதர் ஜமால் மஸ்தான், அப்துல்காதர், சாதிக்அலி, மீரான் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் இப்ராகீம் நன்றி கூறினார்.


