1830 – நான்காம் வில்லியம் பிரித்தானியாவின் அரசராக முடிசூடினார்.
1843 – நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.
1870 – ஐக்கிய அமெரிக்காவில் கிறித்துமசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
1886 – ஆன்றி முவாசான் புளோரின் தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.
1924 – ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு எட்டு ஆண்டுகளின் பின்னர் முடிவுக்கு வந்தது.
1936 – முதலாவது செயல்முறை ரீதியான உலங்கு வானூர்தி பறக்க விடப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் வானூர்திகள் அங்கேரியின் காசா (இன்றைய சிலோவாக்கியாவில்) மீது குண்டுகளை வீசின. அடுத்த நாள் அங்கேரி போரை அறிவித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: சான் மரீனோ மீது பிரித்தானிய வான்படை தவறுதலாகக் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1945 – ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் 50 கூட்டு நாடுகளினால் கையெழுத்திடப்பட்டது.
1948 – முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷாக்லி பெற்றார்.
1960 – முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து சோமாலிலாந்து என்ற பெயரில் விடுதலை பெற்றது.
1960 – மடகாசுகர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1974 – உலகளாவிய தயாரிப்புக் குறியீடு முதன் முதலாக ரிக்லியின் மெல்லும் பசையின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
1976 – கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
1977 – எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை இந்தியானாபோலிசில் நடத்தினார்.
1978 – டொரான்டோ சென்ற ஏர் கனடா 189 விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
1991 – யுகொசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியா மீது 10-நாள் போரைத் தொடங்கியது.
1995 – கத்தாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், சேக் அமத் பின் கலீபா அல் தானி அவரது தந்தை கலீபா பின் அமது அல் தானியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தார்.
1995 – அடிஸ் அபாபாவில் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2000 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தை அறிவித்தார்.
2007 – திருத்தந்தை தேர்தலில் வெற்றி பெறுபவர் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற வேண்டும் என திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தம் கொண்டுவந்தார்.
2012 – கொலராடோவில் பரவிய தீயினால் 347 வீடுகள் எரிந்து சாம்பலாயின, இருவர் உயிரிழந்தனர்.
2013 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் இடம்பெற்ற கலவரங்களில் 36 பேர் உயிரிழந்தனர்.
2015 – ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசமைப்பின் 14வது திருத்தத்தின் படி ஒரு-பால் இணையரின் திருமணம் புரிவதற்கு உரிமை உள்ளதென தீர்ப்பு வழங்கியது.


