நவத்திருப்பதிகளில் மூன்றாம் திருப்பதியான திருப்புளியங்குடி காசினி வேந்தன் பெருமாள் கோயிலில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அலுவலகம் மூலமாக கட்டிட பணி நடந்து வருகிறது. இந்த பணி அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் நடைபெறுகிறது என கோயில் நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கும், ஸ்ரீவைகுண்டம் காவல் துறைக்கும், ஸ்ரீவைகுண்டம் யூனியன் ஆணையாளருக்கும் மனுகொடுத்துள்ளார். தொடர்ந்து அறநிலையத்துறை நீதி மன்றம் மூலமாக இந்த இடத்தில் கட்டுமானம் கட்ட தடை உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுப்பு பலகை ஒன்றிய அலுவலகம் மூலமாக நடைபெறும் பணி நடக்கும் இடத்தில் கோயில் நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன் தலைமையில் பணியாளர்கள் நட்டனர். இந்த வேளையில் ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
இது குறித்து நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன் கூறும் போது, இந்த கோயில் வளாகத்தில் இதற்கு முன்பு இரண்டு கட்டிடங்கள் ஒன்றிய அலுவலகம் மூலமாக கட்டியுள்ளார்கள். அந்த கட்டித்தினை அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கவில்லை. மேலும் தற்போதுள்ள பணியை செய்யக்கூடாது என நாங்கள் தடை கோரியுள்ளோம். அதற்கான வழக்கு முடியும் வரை இந்த இடத்தில் எந்த பணியும் செய்யக்கூடாது என எங்களது அறநிலையத்துறை கோர்ட் உத்தரவு பிரபித்துள்ளது. அதற்கான அறிவுப்பு பலகையத்தான் தற்போது நாங்கள் காவல் துறை உதவியுடன் நட்டுள்ளோம் என்று கூறினார்.
கோயில் வளாகத்தில் அரசு கட்டிடம் கட்டும் பணி நடத்துவதும், அதற்கு அறநிலையத்துறையினர் தடை உத்தரவு பிரப்பித்து இருப்பதும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


