தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 93.86% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 93.86% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 95.43% தேர்ச்சி விகிதத்துடன் 5வது இடத்தில் இருந்த தூத்துக்குடி, இம்முறை 10வது இடத்திற்கு சென்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


