தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இன்று காலை 12 மணியளவில் பெண் ஒருவர் தனியாக கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார்.
திருச்செந்தூர் கடற்கரை அருகே உள்ள பழைய மொட்டை போடும் இடத்தின் அருகே வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சசேர்ந்தவர்? என தெரியாத நிலையில் திருச்செந்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


