ஞாயிற்று கிழமை தினத்தந்தியில் நான் எழுதிய ஆச்சி சொன்ன ஆத்தோரக் கதைகள் நூல் விமர்சனம் வெளிவந்துள்ளது. வெளியிட்ட தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கு மிக்க நன்றி . குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர் சங்கம் சார்பில் அங்குள்ள மகளிர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குவைத் வாழ் தமிழ் சகோதரிகளுடன் பேசிவிட்டு வந்த மறுநாளே தினத்தந்தியில் விமர்சனம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.
நூலைப்பற்றி தினத்தந்தியில் எழுதிய வாசகம்.
ஏற்கனவே வரலாற்று நூல்களை எழுதிய காரணத்தால் ஆசிரியர் இந்த கதைத் தொகுப்பிலும் வரலாறு தொடர்பான தகவல்களைக் கருவாகக் கொண்ட கதைகளைத் தந்து இருக்கிறார். பேரனுக்கு ஆச்சி சொல்வதாக 30 கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பழமொழி அல்லது பேச்சு வழக்கில் உள்ள வாசகங்களுக்கு பேரன் விளக்கம் கேட்பதாகவும் ,அவை தொடர்பான கதையை ஆச்சி சொல்வதாகவும் கதைகள் அமைக்கப்பட்டு, நெல்லை வட்டார மொழி நடையில் கொடுக்கப்பட்டுள்ளன. சிறு தெய்வங்கள் தொடர்பானவை , கார்த்திகை தீப வழிபாட்டுச் சிறப்பு, தமிழர்களின் விளையாட்டு, பட்டப்பெயர்கள், வட்டார வழக்கு, எட்டப்பன் என்ற பெயர் வந்த காரணம், வெற்றிலை போடும் போது அதன் காம்பை கிள்ளுவது ஏன் என்பது போன்றவை இந்தக்கதைகள் வழியாக சுவையாகச் சொல்லப்பட்டுள்ளன. ( ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு, வெளியீடு பொன்சொர்ணா பதிப்பகம், விலைரூ 250.& செல்போன் 97609 70002)
குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர் சங்கம் சார்பில் அங்குள்ள மகளிர் கூட்டத்தில் சகோதரிகளிடன் பேசிவிட்டு வந்த மறுநாளே தினத்தந்தியில் விமர்சனம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


