முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆச்சி சொன்ன ஆத்தோர கதை நூலாக வெளியிட்டது. இந்த நூல் பல்வேறு தமிழ் அமைப்புகளால் பாராட்ட பெற்று வருகிறது. இதற்கிடையில் குவைத்தில் நடந்த தமிழ் பொறியாளர்கள் சங்க 25 வது ஆண்டு சிறப்பு விழாவில் நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு, மற்றும் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் துறை தலைவர் டாக்டர் சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மறுநாள் தமிழ் பொறியாளர்கள் சங்கத்தின் குடும்ப மகளிர்கள் கலந்து கொண்ட மகளிர் மட்டும் நிகழ்ச்சி நடந்தது. குவைத் முகல் மகாலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முத்தாலங்குறிச்சி காமராசு ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள் என்ற தலைப்பில் பேசினார். இந்த தலைப்பில் ஆச்சி சொன்ன ஆத்தோர கதைகள் நூல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுமார் 200 பெண்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் கதைகளை குறித்து ஆர்வமாக கேட்டறிந்தனர். மேலும் மண்ணின் பெருமையை தொடர்ந்து பறைசாற்றும் விதமாக இந்த கதைகள் அமைந்துள்ளது என பாராட்டு தெரிவித்தனர். கூட்டத்தில் சாந்தி கிருஷ்ணா ஜெகன் வரவேற்றார். பாவனி காசி, வனிதா பாலசந்திரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக குவைத் சிறப்பு பேச்சாளர்கள் சலிகா சாகுல் ஊட்டசத்து குறித்தும் , லலிதா தாமரை பாண்டியன் பொருளாதரம் குறித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் சுதாகர், சங்க தலைவர் கிருஷ்ண ஜெகன் பொன்னுசாமி, சங்க செயலாளர் அசோக்குமார் அருள்சாமி, பொருளாளர் சுப்பிரமணியன், காசி, சரவணன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நிஷா ஆறுமுகம் நன்றி கூறினார்.


