தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் இன்னோஸ்குமார். இவரது மகள் அபிநயா. இவர் பாளையங்கோட்டை சின்மியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் தமிழில் 82 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், கணிதத்தில் 98 மதிப்பெண்களும், அறிவியலில் 97 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 89 மதிப்பெண்கள் என மொத்தம் 461 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவரை பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோரான காவல் ஆய்வாளர் இன்னோஸ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரும் வாழ்த்தினர். நாமும் ஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.


