திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்பத்துறை தலைவரும் பேராசிரியருமான சுதாகர் அவர்கள், குவைத் நாட்டில் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கம் சார்பில் கோடை விழா 2024 நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்குவதற்காக சென்றிருந்தார்.
குவைத் விமான நிலையத்தில் அவருக்கு பொறியாளர்கள் சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து இன்று குவைத் அல் சுமேரிடா அரங்கத்தில் நடந்த விழாவில் பேராசிரியர் சுதாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை பொறியாளர்கள் சங்கத்தினர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
இதையடுத்து தமிழ்நாடும் எகிப்தும் ஒரு ஒப்பீடு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொறியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகவும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் தங்கப்பனைமரம் குரூப் நிறுவனத்தின் தலைவர் பலவேசமுத்து, தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க தலைவர் பொறியாளர் கிருஷ்ணா ஜெகன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுச்செயலாளர் அசோக்குமார், நிதிச் செயலாளர் சுப்பிரமணியன், இணைச் செயலாளர் கிஷோர்குமார், இணைப் பொருளாளர் சாமுவேல், இணைச்செயலாளர் (ஐடி) ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


