கோவில்பட்டியில் தமிழ்பாப்திஸ்து பள்ளிகளில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இலுப்பையூரணி தமிழ் பாப்திஸ்து பள்ளியில் நடந்தது.
இதில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் அழகாபுரி தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அன்பின் செல்வி பணி நிறைவை முன்னிட்டுபள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளின் தலைவர் லால்பகதூர் கென்னடி. தாளாளர் சுபாஷ் பாபுசிங் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். இதில்சபை போதகர் ஜெயசிங்,தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், நல்லாசிரியர் இராஜையா, குணசீலன், ராஜா உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.


