சாயர்புரத்தில் நடந்த அரிமா சங்க மாநாட்டில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .
தூத்துக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் சாயர்புரம் செபத்தியாபுரம் அரிமா சங்கம் சார்பில் சாயர் மண்டல மாநாடு நடந்தது மாநாட்டுக்கு மண்டலத் தலைவர் டாக்டர் ஆலயமணி தலைமை தாங்கினார். மாநாட்டில் அரிமா சங்க கவர்னர் டாக்டர் பிரான்சிஸ் ரவி அவரது துணைவியார் பிரமிளா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அரிமா சங்க மகளிர் அணி தலைவி இன்னசியா செல்வி குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் 16 அரிமா சங்ககளின் பாதகை அணி வகுப்பு நடந்தது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ராஜேஷ் ரவி ஏற்றுக்கொண்டார். விழாவில் மாநாடு குழு தலைவர் எஸ்வி அமிர்தராஜ் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் பல்வேறு சங்கங்கள் சார்பில் 3பேருக்கு தையல் மெஷின், 3பேருக்கு மிக்ஸி கிரைண்டர், 25 பேருக்கு அரிசி மூடைகள், செயற்கைகால் உட்பட ரூ.2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் தூத்துக்குடியில் கடந்த 7 ஆண்டுகளாக மரங்களை நட்டு வரும் ஆல் கேன் டிரஸ்ட் சேவையை பாராட்டி அதன் நிறுவனர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேலுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர்கள் முருகன், ஜஸ்டின் பால், சுயம்பு ராஜன், மாவட்ட தலைவர்கள் டாக்டர் கிங்ஸ்டன். டி.ஏ. தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகரன், எஸ்.டி. அழகுவேல் கணேசன், டேவிட் ராஜா, எஸ்விபிஎஸ் பண்டாரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக அரிமா சங்க செயலாளர் எஸ்விபிஎஸ்பி ஜெயக்குமார் நன்றி கூறினார்.


