1870 – இலங்கை, புறக்கோட்டையில் முசுலிம்களின் கலவரம் இடம்பெற்றது.[1]
1897 – ஜெ. ஜெ. தாம்சன் அணுவடித்துகளாக இலத்திரனைக் கண்டுபிடித்ததாக இலண்டனில் அறிவித்தார்.
1900 – அவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.
1937 – பிலிப்பீன்சு பொதுநலவாயம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. 90 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் தனது மனைவி இவாவுடன் பியூரர் பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் பெர்லினில் செருமனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பார்த் நகரில் போர்க்கைதிகள் முகாமில் இருந்து 9000 அமெரிக்க-பிரித்தானியப் படையினரை சோவியத் செம்படை விடுவித்தது.
1948 – கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அமெரிக்க நாடுகள் அமைப்பு உருவானது.
1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது.
1961 – கே-19 என்ற முதலாவது சோவியத் அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1975 – வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
1980 – யூலியானா முடிதுறந்ததை அடுத்து பீட்ரிக்சு நெதர்லாந்தின் அரசியாக முடிசூடினார்.
1980 – இலண்டனில் ஈரானியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தெற்கு ஈரானியப் போராளிகள் அங்கிருந்த பலரை பனயக் கைதிகளாகப் பிடித்தனர்.
1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1982 – இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 17 துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1991 – யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1993 – உலகளாவிய வலையின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.
1999 – ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.
2006 – ஆப்கானித்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
2008 – உருசியாவின் கடைசிப் பேரரசர் இரண்டாம் நிக்கொலாசின் பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
2009 – நெதர்லாந்தில் அரசி பீட்ரிக்சு மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதில், ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.
2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
2013 – நெதர்லாந்தில் பீட்ரிக்சு முடிதுறந்ததை அடுத்து, வில்லியம்-அலெக்சாந்தர் மன்னராக முடிசூடினார்.


