தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது ஸ்தலமாகவும் சூரியனுக்கு அதிபதியாகவும் விளங்கக்கூடிய ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் எழுந்தருளினார்.
பின்னர் கொடிப்பட்டம் சுற்றிவரப் தீபாராதனைக்கு பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.
பின்னர் கொடிப்பட்டம் சுற்றிவரப் தீபாராதனைக்கு பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.
அதைத்தொடர்ந்து தேர்க்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தேர்க்காலுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மே 2 ஆம் தேதி சுவாமி கள்ளப்பிரான், காய்சினி வேந்த பெருமாள், எம்இடர்கடிவான், பொலிந்து நின்ற பிரான் ஆகியோர்க்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடக்கிறது. இரவில் கருடவாகனத்தில் குடைவரை பெருவாயில் எதிர் சேவையும் நடக்கிறது.
மே 6ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.


