1876 – பிரித்தானிய இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.[2]
1920 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1932 – மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1941 – குரோவாசியாவில் குதோவாச் என்ற கிராமத்தில் 200 செர்பியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஒன்பது செருமனிய கடற்படைப் படகுகள் டைகர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானியப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 946 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெனிட்டோ முசோலினியும் அவரது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1949 – பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர் மானுவல் குவிசோனின் மனைவி அவுரோரா குவிசோனும், அவரது மகள், மற்றும் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1952 – சப்பானுக்கும் சீனக் குடியரசுக்கும் இடையில் தாய்பெய் நகரில் அமைதி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரண்டாம் சீன-சப்பானியப் போர் முடிவுக்கு வந்தது.
1952 – இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட சப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1965 – டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
1967 – வியட்நாம் போர்: முகம்மது அலி ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையில் சேர மறுத்ததை அடுத்து, அவரது குத்துச்சண்டை பதக்கமும், உரிமமும் பறிக்கப்பட்டன.
1969 – சார்லஸ் டி கோல் பிரான்சின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
1970 – வியட்நாம் போர்: கம்போடியாவில் அமெரிக்கப் படைகள் கம்யூனிச சரணாலயங்கள் மீது அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
1975 – வட வியட்நாம் இராணுவத்தினர் வெற்றியை நெருங்கிய போது, தெற்கு வியட்நாமின் இராணுவத் தலைவர் காவோ வான் வியென் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
1978 – ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் முகமது தாவூது கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1986 – செர்னோபில் அணு உலை விபத்தை அடுத்து சுவீடனில் உள்ள அணுவுலை ஒன்றில் உயர்மட்ட கதிர்வீச்சு பதிவானது. இதனால், செர்னோபில் விபத்து குறித்த செய்தியை சோவியத் அதிகாரிகள் பகிரங்கப்படுத்த வேண்டிவந்தது.
1988 – அவாயில், அலோகா ஏர்லைன்சின் போயிங் 737 வானூர்தியின் கட்டகத்தில் ஏற்பட்ட பிளவை அடுத்து விமானப் பணிப்பெண் கிளாரபெல் லான்சிங் என்பவர் வானூர்தியில் இருந்து வெளியே வீசப்பட்டு உயிரிழந்தார்.
1995 – பலாலியில் அவ்ரோ விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.
1996 – அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் “மார்ட்டின் பிறையன்ட்” என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.
2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
2005 – இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.


