1707 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: பிரித்தானிய, இடச்சு, போர்த்துக்கல் கூட்டுப் படைகள் பிராங்கு-எசுப்பானிய வீரர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
1792 – கில்லட்டின் மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது.
1804 – மேற்கு ஜோர்ஜியாவின் இமெரெட்டி இராச்சியம் உருசியப் பேரரசின் மேலாட்சியை ஏற்றுக் கொண்டது.
1829 – சார்ல்ஸ் பிரெமாண்டில் மேற்கு அவுஸ்திரேலியாவில் சலேஞ்சர் என்ற கப்பலில் தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1846 – டெக்சசு எல்லை தொடர்பான பிரச்சினை மெக்சிக்கோ-அமெரிக்கப் போருக்கு வழிவகுத்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தன.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.
1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர்த்தொடர் ஆரம்பமானது. ஆத்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டன.
1916 – அன்சாக் நாள் முதல் தடவையாக நினைவு கூரப்பட்டது.
1945 – ஐக்கிய நாடுகள் அவையை நிறுவுவதற்கான ஆலோசனைகள் சான் பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பங்களிப்போடு ஆரம்பமாயின.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிய ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. பெனிட்டோ முசோலினி கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: கடைசி நாட்சிப் படையினர் பின்லாந்தில் இருந்து விலகினர்.
1951 – கொரியப் போர்: காப்பியாங் நகரில் ஐநா படைகளுடன் நடந்த பெரும் மோதலை அடுத்து, சீனப் படைகள் விலகின.
1953 – பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் டூயி வாட்சன் ஆகியோர் டி. என். ஏ.யின் இரட்டை வட அமைப்பை வெளியிட்டனர்.
1954 – முதலாவது செயல்முறை சூரிய மின்கலம் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1961 – ராபர்ட் நாய்சு தொகுசுற்றுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1974 – போர்த்துகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1981 – சப்பானின் சுருகா அணுமின் நிலையத்தில் நூற்றிற்கும் அதிகமான தொழிலாளர்கள் கதிர்வீச்சுத் தாக்கத்திற்கு உள்ளாயினர்.
1982 – காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இசுரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.
1983 – பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
1986 – எசுவாத்தினியின் மன்னராக மூன்றாம் முசுவாத்தி முடிசூடினார்.
1988 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த போர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இசுரேல் மரண தண்டனை விதித்தது.
2005 – இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எத்தியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
2005 – பல்காரியா, உருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
2006 – கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொடைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.


