தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்பு வாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் தாமிரபரணி நதியின் தென்புரம் 7வது ஸ்தலமாக மற்றும் சுக்கிரன் ஸ்தலமாக விளங்ககூடிய தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதர் திருக்கோவில் பங்குனி திருவிழா 30ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5 ஆம் திருவிழாவான கருடசேவை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. தினமும் ஒவ்வொரு நாளும் காலையில் தோளுங்கியன் வீதி புறப்பாடும் மாலையில் பரங்கி நாற்காலி வாகனம், சிம்மவாகனம், அனுமார் வாகனம், சேஷவாகனம், கெருடவாகனம், அன்னவாகனம், யானைவாகனம், இந்திரவாகனம், குதிரைவாகனம், ஆகிய வாகனங்களில் சுவாமி உற்சவர் நிகரில் முகில்வண்ணன் எழுந்தருளுகிறார். 9 ஆம் திருவிழாவான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு உற்சவர் நிகரில் முகில்வண்ணன் தேரில் எழுந்தருளுகிறார், பின்பு காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
10ம் திருவிழா தாமிரபரணி தீர்த்தவாரியும் வெற்றி வேர்சப்பரத்தில் வீதி உலாவும் நடக்கிறது. விழாவில் நிர்வாக அதிகாரி அஜித் .தர்கார் விஸ்வநாத் பொதுமக்கள், பக்தர்கள், கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


