செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள மிகவும் பழமையான செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆலயம், முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயங்களில் சனிப்பிரதோஷம் மிகச்சிறப்பாக நடந்தது.
முத்தாலங்குறிச்சியிலி சிவன், லெட்சுமி நரசிம்மர், ராம விநாயகருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. சனி பிரதோஷத்தினை முன்னிட்டு சிவன், நந்தி பகவான், சிவகாமி, பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் சேகர் கம்பர் செய்திருந்தார்.

செய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர், சிவகாமியம்மாள், நந்தி தேவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. சனி பிரதோஷத்தினை முன்னிட்டு சப்பரத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜைகளை அர்ச்சகர் முத்துராமன் செய்திருந்தார். ஏற்பாடுகளை அறங்காவலர் குருமாரியப்பன் தலைமையில் ஆன்மிக பக்த பேரரவையினர் செய்திருந்தனர்.


