தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி இன்று ஸ்ரீவைகுண்டம் பஜார், மற்றும் அதைச்சுற்றியுள்ள தோழப்பன்பண்ணை, பேரூர் ஆயத்துறை பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ஒவ்வொரு பகுதியிலும் அவருக்கு செண்டை மேளங்கள் முழங்க, பெண்கள் பூதூவி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மதியில் கனிமொழி பேசுகையில்,
இந்தத் தேர்தலில் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, இதுவரை பார்க்காத அளவிற்கு மழை வெள்ளத்தால் மக்கள் சந்தித்துள்ளார்கள். ஆனால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நிவாரண பொருட்களாகட்டும் மக்களுக்கு தரப்பட்டுள்ள நிவாரண நிதியாக இருக்கட்டும் வீடு இழந்தவர்கள் வீடு கட்டுவதற்கு நமது முதலமைச்சர் 4 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். பகுதியாக வீடு இடிந்து உள்ளவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பிரதமர் இதுவரை தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி கொடுக்கவில்லை. நிவாரணம் வேண்டும் எனக் கேட்டபோது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி முழுவதும் பார்வையிட்டு சென்றார்கள் ஆனால், நாம் நிதி கேட்பது பிச்சை கேட்பது போல் நினைக்கிறார்கள். அதனை மாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் கொடுக்க மாட்டார்கள். நமது வரியெல்லாம் வாங்கி செல்கிறார்கள். ஒரு ரூபாய் வரியை வாங்கி சென்று 26 பைசா மட்டுமே கொடுக்கிறார்கள். உத்திரபிரதேசத்திற்கு இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுக்கிறார்கள். மழை வெள்ளத்தில் எதுவும் கொடுக்கவில்லை ஆனால் தேர்தல் வந்தவுடன் திரும்பத் திரும்ப வருகிறார்கள். தமிழகத்தில் யாரும் ஓட்டுப் போட போவதில்லை என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
100 நாள் வேலை ஒழுங்காக கிடைப்பதில்லை பணமும் ஏறுவதில்லை. நம் இந்தியா கூட்டணி ஆட்சி மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி வந்ததும் 100 நாள் வேலையை 150 நாளாக ஆக்குவோம் என்றும் சம்பளம் 400 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்,காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் 410 இப்போது 1050 ரூபாய். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி வந்தவுடன் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் சுங்கச்சாவடி மூடப்படும். பெற்றோர்களை 75 ரூபாய் டீசல் விலை 65 ரூபாய் வழங்கப்படும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் மூடப்படும். இதெல்லாம் செய்ய வேண்டும் என்றால், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுப் போட வேண்டும்.
மோடி ஆட்சிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் 410 இப்போது 1050 ரூபாய். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி வந்தவுடன் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் சுங்கச்சாவடி மூடப்படும். பெற்றோர்களை 75 ரூபாய் டீசல் விலை 65 ரூபாய் வழங்கப்படும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் மூடப்படும். இதெல்லாம் செய்ய வேண்டும் என்றால், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுப் போட வேண்டும்.
இந்திய எல்லையில் சீன அரசு ஒரு சில கிராமங்களை கைப்பற்றி விட்டதாக சீன மொழியில் அந்த பகுதிகளுக்கு வந்து பெயர் பலகை வைத்துவிட்டு இந்த இடத்தை நாங்கள் கைப்பற்றி விட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவே பெரும் பரபரப்பாக பேசப்படும் நிலையில் சீன நாட்டின் நடவடிக்கைக்கு எதிராக பாரத பிரதமர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்திய எல்லையையே காப்பாற்றுவதற்கு பாரத பிரதமருக்கு முடியவில்லை. இவர் எப்படி இந்தியாவை காப்பாற்ற போகிறார் என கனிமொழி எம்பி பாரத பிரதமர் குறித்து கடுமையாக சாடினார்.
தேர்தல் வரும் நேரங்களில் தான் பிரதமருக்கு தமிழ்மேல் பற்று ஏற்படுகிறது. நான் தமிழனாக பிறக்கவில்லையை என பிரதமர் வருத்தப்படுகிறாராம். தேர்தல் முடிந்ததும் எங்களது முதல்வர் உங்களுக்கு ஒரு நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பி வைப்பார். அதன்பின்னர் நீங்கள் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமரை கிண்டல் செய்தார்.
பாஜகவின் ஒரு அமைச்சரின் மகன் விவசாய மக்கள் மீது காரை ஏற்றி 4 கொலை செய்தார். தற்போதும் டெல்லியில் ஆதார விலை வேண்டும் என்று கோரிக்கை வைத்த விவசாயிகள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்ததற்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக, மோடி அரசு ஆகிய இரண்டுமே பெரிய ஸ்டிக்கர் சின்ன ஸ்டிக்கர். இரண்டும் மீண்டும் ஒட்டிக்கொள்ளும். டெல்லியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்த தேர்தல் வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி எனது இரண்டாவது தாய் வீடு, மறுபடியும் உங்களோடு பணியாற்ற கூடிய வாய்ப்பை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்றார்.


