தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் சுமார் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு இன்று (மாா்ச் 26) தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வை 22 ஆயிரத்து 307 மாணவா்- மாணவிகள் எழுதுகின்றனா். இத்தோ்வு இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி ஏப். 8ஆம்தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்டங்களில் 106 மையங்களில் 10 ஆயிரத்து 854 மாணவா்கள், 11 ஆயிரத்து 453 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 307 போ் எழுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


