செய்துங்கநல்லூர் 1 வது வார்டை சேர்ந்தவர் நண்பர் சண்முகசுந்தரம். இவர் பழமையை பாதுகாப்பவர். இவர் வீட்டில் தனது முன்னோர்கள் பயன்படுத்திய நெல் குலுக்கை , கல் தொட்டி போன்றவற்றை வைத்து பராமரித்து வந்தார். தற்போது காலங்கள் முன்னேறி நவீனமாக மாறி வருவதை கண்டு, தங்களது முன்னோர்கள் கட்டிகாத்த பொருள்களை பாதுகாக்க ஆசைப்பட்டார். இதற்காக என்னை நாடினார். நான் நெல்லை அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசக்திவள்ளி அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தேன். முதல் கட்டமாக தான் முன்னோர்கள் சேர்த்து வைத்த நெல் குலுக்கையை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். அதற்கான சான்றிதழை காப்பாட்சியர் வழங்கினார். பழங்கால பொருள்களை காப்பாற்ற வேண்டும் என முயற்சித்த நண்பர் சண்முக சுந்தரம் அவர்களை பாராட்டுகிறேன். நண்பர்களே இதுபோன்ற பழமையான பொருள்கள் எதுவும் இருந்தால் அருங்காட்சியகத்தில் ஒப்படையுங்கள் பாதுகாக்கப்படும். அதில் நமது ஊர் பெயரை எழுதி வைக்க ஏற்பாடு செய்கிறோம். அருங்காட்சியகத்தில் நமது ஊர் புகழ் பாடிக்கொண்டிருக்கட்டும். இந்த பொருளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த காப்பாட்சியர் அவர்களுக்கு நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


