நெல்லை சந்திப்பு டி.என்.ஜி.ஓ சங்க கட்டிடத்தில் வைத்து கவிஞர் ம. சக்தி வேலாயுதம் எழுதிய “செம்புலப்பெயல் நீர்” நூல் வெளியீட்டு விழா நடந்தது. நான் தான் தலைமை வகித்தேன். கவிஞர் ஜெயபாலன், தமிழ்ச்செம்மல் பாமணி, கவிஞர் கோதை மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய தமிழ் பற்றாளர் சிவ செல்வ மாரிமுத்து வரவேற்றார். நூலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலப் பொதுச்செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டார். கவிஞர் பாப்பாக்குடி இரா செல்வமணி, ஏ.ஐ.டி.யூ.சி மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர். பேராசிரியர் இராமசந்திரன், முனைவர் நா. சங்கரராமன் ஆகியோர் நூலை திறனாய்வு செய்தனர். தமிழக அரசின் ச.வே.சு விருதுபெற்ற எழுத்தாளர் நாறும்பூ நாதன் சிறப்புரையாற்றினார். நெல்லையின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரெங்கன், சடையப்பன், முனைவர் கணபதி சுபிரமணியன், பேராசிரியர் ஹரிஹரன், தளவாய் திருமலையப்பன், சொக்கலிங்கம், சரவணகுமார், முனைவர் பிரியதர்ஷினி, மகாலெட்சுமி, கவிஞர் தாணப்பன், கவிஞர் ரமணி முருகேஷ், கவிஞர் காந்திமதி வேலன் , பிரியா பிரபு, கவிஞர் பார்த்திபன், வண்ணமுத்து , ஜனனி சக்தி வேலாயுதம், மூக்குப்பீறி தேவதாசன், தேரிக்காட்டு எழுத்தாளர் கண்ணகுமார விசுவரூபன், தம்பான், ,நூலகர் அகிலன் முத்துக்குமார், கண்ணன் புலமி, விக்டர் துரைராஜ், சண்முக சுந்தரம், மணிகண்டன், ராமசுப்பிரமணியன், தியாகராஜன், சுரேஷ்அஸ்வின் ஓவியர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கவிஞர் செ. ச. பிரபு, எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்கினார். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். கவிஞர் ம. சக்தி வேலாயுதம் ஏற்புரையாற்றினார். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் செய்திருந்தது. நானும் என்னுடைய சிஷ்யன் சுடலை மணிச்செல்வனோடு கலந்துகொண்டு, சுவையாக இரவு உணவு சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியோடு திரும்பினேன்.
சக்தி வேலாயுதத்துக்கு மிக்க நன்றி. அகரம் மாடசாமி அவர்கள் அவர் எழுதிய புத்தம் புதுமைகள் என்ற நூலையும், உங்கள் நண்பன் ஆசிரியர் அவர்கள் தனது சார்பாக உங்கள் நண்பன் நூலையும் எனக்கு பரிசாக தந்தார்கள். அவர்களுக்கும் நன்றி அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


