தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணைப்படி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் அவர்களின் ஆலோசனை படியும் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 24 முகாம்கள் அமைக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது வல்லநாடு பேருந்து நிறுத்தம் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதிதாசன் மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் மதிவாணன் அவர்கள் துவக்கி வைத்தனர்
முகாமில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணவேணி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு முத்துக்குமார வெங்கடேசன் சமுதாய நல செவிலியர் திருமதி எமிமாள் பகுதி சுகாதார செவிலியர் திருமதி ராமலட்சுமி சுகாதார ஆய்வாளர்கள் சாஹிர் நித்திஷ் சர்பின் ஆகியோர் மேற்பார்வை பணிகளை செய்தனர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் இடைநிலை சுகாதார செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வல பணியாளர்கள் பங்கு பெற்றனர் .


