செய்துங்கநல்லூர் அருகில் உள்ள எஸ். என்.பட்டி திருமண மண்டபத்தில் உயர்கல்வி மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்சி சேர்ந்த கிரேஸி இமானுவேல் கலந்துகொண்டு, மேல் கல்வி படிப்பு எப்படி படிப்பது. எதை தேர்ந்தெடுப்பது. வேலை வாய்ப்பு சம்பந்தமான திட்டம் வகுத்து கொடுத்தல், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் கல்வி குறித்து ஆலோசனை, ஏழை எளிய மாணவ மாணவியருக்கு உதவி கரம் நீட்டி படிப்பை தொடர வைப்பது உள்பட கல்வி ஆலோசனை கூறப்பட்டது. அரசு கல்விக்காக செய்து கொடுக்கும் திட்டங்களை எப்படி பெறுவது, சலுகைகளை தெரியப்படுத்துவது. யார் யாருக்கு எந்த கல்வியை அரசு சலுகை மூலம் பெறலாம் என்பது குறித்து இலவச ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வடகரையான் தலைமை வகித்தார். சேவியர்கல்லூரி உதவி பேராசிரியர் ஜோஸ்பின் பாபா, சாரதா கல்லூரி தமிழ் உதவி பேராசிரியர் சிந்து , ஆகியோர் முன்னிலை வகித்தனர். கதிர்வேல்மாதவன் வரவேற்றார். டாக்டர கிராஸி இமானுவேல் சிறப்புரையாற்றினார். கிரேஸி கல்வி தொண்டு நிறுவன உறுப்பினர் ராஜசேகர், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், பானுமதி உள்பட பலர் கலந்துகொண்னர். வசந்த நன்றி கூறினார்.
.


