மா கா பா ஆனந்த் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் கோவை சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார்.
நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்தார்.


