கவிஞர் நெருப்பு விழிகள் ம. சக்தி வேலாயுதம் எழுதிய “செம்புலப்பெயல் நீர்” கவிதை நூல் வருகிற 3 ந்«தி ஞாயிற்று கிழமை மாலை 4 மணிக்கு நெல்லை சந்திப்பு யூனியன் பேங்க ஆப் இந்தியா மேல் தளத்தில் நடைபெறுகிறது. அதன் அழைப்பிதழை கொண்டு வந்திருந்தார். அவரோடு எழுத்தாளர் பிரபு அவர்களும் வந்திருந்தார். இருவரையும் எனது நூலை கொடுத்து வரவேற்றேன். இந்த சமயத்தில் பரிதாபங்கள் யூ டியூப் சேனல் , மற்றும் விடுதலை பட நடிகர் தம்பி கதிர் வேல் மாதவனும் என்னை பார்க்க வந்திருந்தார். இரட்டிப்பு சந்தோசம். வாழத்துக்கள். வளருங்கள் மூவரும் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


