அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கோப்பர்நிக்கஸ் பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி தூத்துக்குடி அஸ்ட்ரோ க்ளப்பும் பள்ளி அறிவியல் மன்றமும் இணைந்து கொண்டாடியது பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் முத்துசாமி வன்னியப்பன் கோள் திருவிழா 2024 பள்ளிகளில் ஏன் கொணாடாடவேண்டும் என்பது குறித்தும் நடைபெற இருக்கும் யூத் அஸ்ட்ரோனமி ஸ்பேஸ் சயின்ஸ் காங்கிரஸ் மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி பேட்டன்ட் உரிமை கோருவது குறித்தும் மாணவர்களிடம் உரையாடினார். மாணவ மாணவிகள் கோப்பர்நிக்கஸ் வினாடி வினா வில் பங்கேற்றனர் பின்னர் பள்ளியில் இருந்து தொலைவில் உள்ள வல்லநாடு மலைமேல் இருக்கும் கோவில் கட்டிடத்தை டெலஸ்கோப் மூலம் கண்ணருகில் கண்டு மகிழ்ந்தனர் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார் ஆசிரியர்கள் பட்டு ராஜன் வின்சென்ட் சுப்புலட்சுமி சுதா கவிதா ஆசிரியர்கள் மாணவமாணவியர்கள் அனைவரும் பங்கேற்றனர்


