திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வற்றாத ஜீவ நதி நமது தாமிரபரணி ஆறு ஆகும். இந்த நதி தமிழகத்தில் உற்பத்தி ஆகி தமிழகத்தில் கடலில் கலக்கும் ஒரு நதியாகும்.
இந்த நதியானது விவசாய பயன் பாட்டிற்க்கு பயன் படுவதுடன் சுமார் 7 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த படுகிறது. இந்த நதி தூய்மையாக இருப்பதற்காகவும் வெள்ள காலங்
களில் தண்ணீர் வெளியேறி செல்லாமல் ஆற்றின் கரையின் உள்பகுதிக்குள் செல்லும் வகையில் பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், தன்னார்வ அமைப்பு, தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார் கள் இந்த நிலையில் தமிழக அரசு இந்த நிதி நிலை அறிக்கையில் சுமார் 200கோடி
க்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு செய்துள்ளது தாமிரபரணி மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இதற்காக தமிழக அரசு க்கும், மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு நிதி அமைச்சர், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர், இதற்கு வித்திட்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திருநெல்வேலி தூத்துக்குடி பொது மக்கள் சார்பாகவும், நான் சார்ந்த நம் தாமிரபரணி சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
தாமிரபரணி யின் பாதுகாப்பு க்கு செய்ய வேண்டிய பணிகள்
1) தாமிரபரணி ஆற்றின் ஆரம்ப பகுதி முதல் கடலில் கலக்கும் புன்னகாயல் வரை டிஜிட்டல் சர்வே செய்து சர்வே கல் நிறுவி ஆக்கிரமிப்பு களை அகற்றி பாதுகாக்க வேண்டும்
2) பரிகாரம் செய்ய தனியிடம் ஒதுக்கீடு செய்து பரிகார துணிகள் ஆற்றில் விழாமல் தடுத்துபாதுகாக்க வேண்டும்.
3) கழிவுநீர், பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும் பாதாள சாக்கடை குழாய்கள் ஆற்றின் வழியாக செல்வதால் வெள்ள காலங் களில் உடைப்பு ஏற்பட்டு ஆற்றில் கலப்பதை தடுக்க இரு கரைகளிலும் அரசு புறம்போக்கு நிலங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதில் சுத்திகரிப்பு செய்து அந்த நீரை விவசாயம் மற்றும் வீட்டு வேலைகளுக்கு பயன் படுத்த குறைந்த விலை க்கு வழங்கலாம் இதன்மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் விற்பனை செய்வது தடுக்க வாய்ப்பு ஏற்படும்
4) மக்கள் பயன்படுத்தும் படித்துறை, கல் மண்டபங்கள் பராமரித்து பாதுகாக்க வேண்டும்
5) ஆற்றின் உள்பகுதிக்குள் உள்ள குப்பைகள்,சீம கருவேல மரங்கள் அப்புற படுத்தி ஆற்றின் பாதுகாப்புக்குரிய மருது, இலுப்பை பனை உள்ளிட்ட மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும்.
6)ஆற்றின் உள்பகுதியில் மோட்டார் வாகனங்கள் கழுவுவதை தடுக்க இரு கரைகளிலும் தடுப்பு சுவர் அமைத்து பாதுகாக்க வேண்டும் (நாரணம்மாள புரத்தில் உள்ளது போல்)
7) ஆற்றின் உள்பகுதியில் அமைக்க பட்ட கழிவறைகள், பாதாள சாக்கடை மேனுகோல் முற்றிலுமாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன்
சாமி. நல்லபெருமாள்.
ஒருங்கிணைப்பாளர்.
நம் தாமிரபரணி
திருநெல்வேலி & தூத்துக்குடி.


