ஸ்ரீவைகுண்டத்தில் அட்மா வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழுக் கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம் -அட்மா சார்பில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வனஜா தேவி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் இமயா முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார ஆலோசனை குழுத்தலைவர் பெருமாள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் வனஜா தேவி துறை சார்ந்த திட்டங்களை பற்றி விளக்கமாக கூறினார். அட்மா திட்டத்தில் உள்ள செயல்பாடுகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இசக்கிராணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தி மற்றும் அசோக் அய்யாசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


