நெல்லை புத்தக கண்காட்சியில் சிறை கைதிகளுக்கு என புத்தக சேகரிக்க ஸ்டால் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்டாலில் தங்கள் வீட்டில் பயன்படுத்திய புத்தகங்கள் மேலும் கைதிகளுக்கென தாங்கள் சேகரித்த புத்தகங்களை வாசகர்கள் வழங்கி வருகிறார்கள். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தனது சார்பாக 100 புத்தகங்களை வழங்கினார். அவர் தான் செல்லும் நிகழ்ச்சியில் பரிசாக வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் தான் எழுதிய புத்தகளை சிறைச்சாலைக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் ரவி, ஜோஸ்பின் பாமா, எழுத்தாளர் சிற்பி பாமா, நக்கீரன், அபிஷ் விக்னேஷ், திநெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான், சடையகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


