தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தினை எப்படி செயல் முறை படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் லெடசுமி பதி துவக்கி வைத்தார். இந்த வாகனம் செய்துங்கநல்லூர் வருகை தந்தது. செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி, செய்துங்கநல்லூர் பஜாரில் வைத்து இந்த இயந்திரத்தினை எப்படி இயக்குவது என வாக்காளர்களிடம் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளகத்தினை செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சிவகுருநாதன் விளக்கினார். அதன் பின் இந்த வாகனம், கருங்குளம், சேரகுளம் பகுதிக்கு சென்று அங்கு மின்னனு வாக்கு பதிவு இயந்திர செயல் முறை குறித்து விழிப்புணர்வு செய்ய கிளம்பியது.


