தூத்துக்குடியில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு மையத்தை ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த ஜன.7-ல் நடைபெறவிருந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வு புயல், மழை காரணமாக பிப்.4-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதன்படி தூத்துக்குடியில் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் மொத்தம் 985 தேர்வுக்காக பதிவு செய்திருந்தனர் இதில் 949 பேர் தேர்வு எழுதினார்கள். 36பேர் தேர்வு எழுதவில்லை. காரப்பேட்டை ஆண்கள் பள்ளியில் நடந்த தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


