தூத்துக்குடி மாவட்டம். கருங்குளம் ஊராட்சி ஒன்றியம். ஆறாம் பண்ணை ஊராட்சியில் இன்று 26/1/ 2024அன்று காலை 8.30மணி அளவில் ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் குடியரசு தின கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.இந்த கொடியேற்றும் விழாவில் ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல்காதர் கொடியேற்றினார். மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் அப்துல் கனி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்களும்அனைவரும் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.காலை 11 மணி அளவில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர்.சா.சேக் அப்துல் காதர் தலைமையில். இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அப்துல் கனி. வார்டு உறுப்பினர் இப்ராஹீம். ஆறாம் பண்ணை கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் கென்னடி. ஆறாம் பண்ணை நியாய விலை கடை ஊழியர் சீனி. பற்றாளர் ராமு. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளைச்சாமி. ஆறாம் பண்ணை கிராம நிர்வாக உதவியாளர் சரத்குமார். ஆறாம் பண்ணை மக்கள் நல பணியாளர் அருணாசலம். பணித்தள பொறுப்பாளர் ஜீவா. ஆறாம் பண்ணை ஊராட்சி செயலர் ஹரிஹரன் சுந்தரம். மற்றும் மக்கள் நலச் சங்க நிர்வாகிகள் ஹனிபா மற்றும் ஹனீப் ஜியாவுதீன். மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



