தூய சவேரியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 75வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கி குடியரசு தின உரையை கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஜாய்ஸ் மேரி, துறைத் தலைவர்கள் வெங்கடேஷ், ஆறுமுக சேகர், பென் மேத்யூ, ஜான் செண்பகத்துறை, மூத்த விரிவுரையாளர் சந்திரசேகரன், ஆய்வக போதகர் ஹைதர் அலி, அலுவலகப் பணியாளர்கள் கல்யாணி, ஆரோக்கிய மேரி ரூபினா மற்றும் அனைத்து நிலையில் உள்ள பணியாளர்களும் கலந்து கொண்டனர். திரு ஆறுமுக சேகர் என் எஸ் எஸ் அலுவலர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் நிகழ்ச்சியை வரவேற்றார். இரண்டாம் ஆண்டு மாணவர் நாகராஜன் நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் செய்திருந்தார்கள்.


