திருநெல்வேலி மாவட்டம், அனைத்தலையூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் இன்று காலை தனது மனைவி குழந்தைகளுடன் தனது சொகுசு காரில் தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது திருநெல்வேலி தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் வல்லநாடு அருகே காரில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்த கோவிந்தராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது மனைவி குழந்தைகளுடன் அவசர அவசரமாகக் காரிலிருந்து கீழே இறக்கியுள்ளார்.
அதற்குள் காரின் எஞ்சின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அனைத்தனர். இருந்தும் கார் அதிக அளவில் தீயில் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவமும் அதில் இருந்த 4 பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.