காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் நினைவாக தமிழக அரசு சார்பில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் அவருடைய திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.


