தாமிரபரணி ஆற்றில் கடந்த மாதம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து உதவி கரம் நீட்டி மக்களை அரவணைத்து வருகிறார்கள் . அதுபோல கலிபோர்னியா நாட்டில் வசிக்கும் மென் பொருள் பொறியாளர் கலிபோர்னியா கலைஞன் ஒருவர் முடிதிருத்தும் ஊழியருக்கு உதவியுள்ளார்.
முத்தாலங்குறிச்சி அம்மன்கோயில் தெருவில் சலூன் கடை நடத்தி வருபவர் மணி. இவரது கடை கடந்த தாமிரபரணி வெள்ளத்தின் போது முழுவதும் முழ்கி விட்டது. தண்ணீர் வடிந்த பிறகு பொருள்கள் எல்லாமே நாசமாகி விட்டது. எனவே இவருக்கு ஏதாவது உதவ வேண்டுமென எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தனது முக நூல் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதை கண்ட அமெரிக்கா , கலிபோர்னியாவில் வசித்து வரும் மென்பொருள் பொறியாளர் ராமன் செல்லத்துரை என்ற கலிபோர்னியா கலைஞன், எழுத்தாளருடன் தொடர்பு கொண்டார். முடிதிருத்தும் கலைஞர் மணிக்கு சேதமடைந்த பொருள் வாங்க ரூபாய் 5 ஆயிரம் உடனே அனுப்பி வைத்தார். அந்த பொருள்களை வாங்கி அவரிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஒப்படைத்தார். பழக்கடை அதிபர் வள்ளி நாதன், கம்யூட்டர் இன்சினியர் சடையகோபால் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


