சென்னை புத்தக கண்காட்சியில் இன்று சுவடு பதிப்பகம் வெளியிடும் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தீதும் நன்றே நாவல் வெளியிடு மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. சுவடு பதிப்பகம் ஸ்டால் எண் 495 பொன்னி அரங்கத்தில் நடைபெறும் விழாவிற்கு சென்னை வாழ் நெல்லை மக்கள்நலச்சங்கம் தலைவர் சைமன் ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். சுவடு பதிப்பகம உரிமையாளர் நல்லு லிங்கம் வரவேற்று பேசுகிறார். ஊடகவியாளர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நூலை வெளியிட சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சங்கர் மணி நூலை பெற்றுக்கொள்கிறார். இதில் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துகொள்கிறார்கள்.


