குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர்ககள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர்களாக கண்ணன், ரவீந்திரன் குமரன், கணேசன் மகாராஜன், வெங்கடேஸ்வரி ஆகியோர் பதவியேற்றனர். இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் அறங்காவலர் குழு தலைவராக கண்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன்,உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் ஆய்வாளர் பகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணணுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, உடன்குடி ஒன்றிய செயலாளர் இளங்கோ, பாலசிங், உடன்குடி பேரூராட்சி மன்ற துணை தலைவரும் நகரச் செயலாளருமான ராஜேஷ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயப்பிரகாஷ், சிராஜுதின், மதன்ராஜ் ,ஓட்டுனர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் அலாவுதீன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் மகாவிஷ்ணு உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.


