முடிவைத்தானேந்தல் மக்களிடம் வாசிப்பு இயக்கம் தூத்துக்குடி அஸ்ட்ரோ க்ளப் உலகப் பொதுமறை திருக்குறள் இயக்கம் நல் குடிமக்கள் இயக்கம் இணைந்து அரசன் இருங்கோவேள் நினைவு படிப்பகத்தை ஆரம்பித்துள்ளனர் இங்கு நாளிதழ்கள் மாத இதழ் போட்டித்தேர்வு புத்தகங்கள் பொது அறிவு புத்தகங்கள் பல்வேறு கொடையாளர்கள் வழங்கியுள்ளார்கள் முனைவர் பாண்டியன் வழக்கறிஞர் படிப்பகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள். விழாவில் தமிழ்உரைமாமணி பட்டம் பெற்ற சிவ. சி சுப்பிரமணியம் ஊர்மக்கள் முன்னிலையில் முனைவர் முத்துசாமி வன்னியப்பன் வாழத்தி கவிதைமடல் வாசித்து பாராட்டினார். செந்தில் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் . முத்து பாரதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். போட்டி தேர்வு எழுத இருப்போர்க்கு புத்தகங்கள் முத்துசாமி வழங்கினார் . படிப்பகத்திற்கு இடம் வழங்கிய கண்ணன் சுடலை முத்து அனைவராலும் பாராட்ட பட்டார். விழா சிறக்க சேரந்தையன் சங்கர் சுப்பிரமணி ஏற்பாடுகளை செய்தனர் நாட்டுபண் பாடி நிறைவுற்றது


