கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பணியாளர்கள் அனைவரும் இணைந்து பொங்கலிட்டு விளையாட்டுக்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
இந்தப் பொங்கல் விழாவை கல்லூரி முதல்வர் முனைவர் தேரடி மணி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
பனை மற்றும் வாழை ஆராய்ச்சி நிலைய சிறப்பு அலுவலர் சொர்ண பிரியா முன்னிலை வகித்தார்.
பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்லூரியின் முன்னாள் மாணவர் காடுகளின் பாதுகாவலர்கள் மற்றும் கள இயக்குனர் மாரிமுத்து உறியடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
மேலும் அதனைத் தொடர்ந்து உறியடி, கயிறு இழுத்தல் , நீர் நிரப்புதல், செங்கல் போட்டி , நாட்டுப்புற நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு நடனம் ஆடினர்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த பொங்கல் திருவிழாவில் ஆசிரியர்கள் ,ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


