தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம் நடைபெறவுள்ளது. ஜன.19-இல் தூத்துக்குடி, ஜன.22-இல் சாத்தான்குளம், 23-இல் திருச்செந்தூா், 24-இல் கோவில்பட்டி ஆகிய வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
இதில், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், சிபி சோ், மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு பல்வகை மாற்றுத்திறன் பயிற்சி உபகரணங்கள், காதொலி கருவி, பாா்வைத்திறன் குறைபாடுடையோருக்கான உதவி உபகரணங்கள், திறன்பேசி, செயற்கை கை, கால் தாங்கி உள்ளிட்டவை வழங்குவதற்கு மதிப்பீடு செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை , வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.


