1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச கடற்படையும் சர் எக்டர் மன்ரோ தலைமையிலான தரைப்படையும் இணைந்து திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றின. ஆகத்து 29 இல் இக்கோட்டையை அவர்கள் பிரான்சிடம் இழந்தனர்.
1787 – யுரேனசின் டைட்டானியா, ஒபரோன் ஆகிய இரண்டு சந்திரன்களை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
1805 – அமெரிக்காவில் மிச்சிகன் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
1851 – சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சஸ் அருகே அலபாமா என்ற கப்பல் ஆட்டரசு என்ற கப்பலை மோதி மூழ்கடித்தது.
1879 – ஆங்கில-சூலூ போர் ஆரம்பமானது.
1911 – காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மௌலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.
1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
1923 – முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட இழப்பீடுகளைப் பெறும் பொருட்டு பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் படையினர் செருமனியின் ரூர் பகுதியைக் கைப்பற்றினர்.
1935 – அவாயில் இருந்து கலிபோர்னியா வரை தனியாகப் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை அமேலியா ஏர்ஃகாட் பெற்றார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர் டச்சு கிழக்கிந்தியாவின் போர்ணியோவில் தரக்கான் தீவைக் கைப்பற்றினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
1946 – கம்யூனிசத் தலைவர் என்வர் ஓக்சா அல்பேனியாவின் அரசுத் தலைவராகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
1957 – ஆப்பிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
1962 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி பி-37 தீப்பிடித்து அழிந்தது.
1962 – பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாசுக்கந்து நகரில் மாரடைப்பால் காலமானார்.
1972 – கிழக்குப் பாக்கித்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1994 – அயர்லாந்து அரசு ஐரியக் குடியரசு இராணுவம், மற்றும் அதன் அரசியல் அமைப்பான சின் பெயின் ஆகியவற்றின் ஒலிபரப்புகள் மீதான 15-ஆண்டுகள் தடையை நீக்கியது.
1998 – அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 – செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.
2013 – சோமாலியாவில் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் ஒருவரை விடுவிக்க எடுத்த முயற்சியில் ஒரு பிரெஞ்சுப் படைவீரரும், 17 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.


