தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஆறாம்பண்ணை நியாய விலைகடையில் நடைபெற்றது.
இதில்ஆறாம் பண்ணை ஊராட்சி மன்றதலைவர் சேக் அப்துல்காதர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மட்டும் வேஷ்டி சேலை மற்றும் ரொக்க பணத்தை வழங்கினார். இந்த விழாவில் ஆறாம்பண்ணை நியாய விலைகடை ஊழியர் சீனி ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அப்துல் கனி, வார்டு உறுப்பினர்கள் இப்ராஹிம், மரியம் பானு, சொஹரா, முகமது பாத்திமா, செய்யது பாத்திமா, ஆறாம்பண்ணை கிராம நிர்வாக உதவியாளர் சரத்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


