தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை திருநாவுகரசர் சபை சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான சுவாமிகள் தலைமையில் விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் நாணல்காடு கிராமத்தில் வசித்து சைவ சமய பணியும், சமுதாய பணியும் செய்து வருவதை பாராட்டி உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திருவளர் செல்வி சிவ.உமாதுரைச்சி அவர்களுக்கு “மங்கையர்கரசியார் விருது” மற்றும் பொன்னாடை அணிவித்து பொற்கிழி ரூ.2000 வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் செல்வம் பட்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


