சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்க விழா தூத்துக்குடியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டு நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதல்வர் ஜெ.பூங்கொடி, கண்காணிப்பாளர் பி.சரவணன் ஆகியோர் முன்னிலையில் கல்லூரியின் ஸ்மார்ட் அறையில் காணொளி வாயிலாக காண்பிக்கப்பட்டது. தூத்துக்குடி காமராஜர் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் தங்கள் பணியின் போது கிடைத்த இந்த வாய்ப்பைப் பற்றி தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தினர். ம.சு.பல்கலைக்கழக சிறந்த என்எஸ்எஸ் திட்ட அலுவலர், உதவி பேராசிரியர் மற்றும் வணிக நிர்வாகத் துறைத் தலைவர் ஆர்.கருப்பசாமி, டி.விஜலக்ஷ்மி மற்றும் ஏ.ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரி, ஜி.வி.என். கல்லூரி, சாத்தான்குளம் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பாா்க்கும் வகையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கம், தூத்துக்குடி சிப்காட் வளாகம், கோவில்பட்டி சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய 3 இடங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


