புயல் காற்று எச்சரிக்கை காரணமாக கடலுக்குச் செல்லாமல் இருந்த மீனவா்கள் 5 நாள்களுக்குப் பின்னா் மீன்பிடிக்கச் சென்றனா்.
வங்க கடல் பகுதி, மன்னாா் வளைகுடா, குமரி கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று, சுழல் காற்று வீசக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையையடுத்து, தூத்துக்குடி மீனவா்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்லவேண்டாம் என மீனவளத் துறையினா் அறிவித்தனா். அதன்படி, கடந்த டிச.30-ஆம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்த நிலையில், நேற்று முதல் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதித்ததையடுத்து, தூத்துக்குடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். மேலும், கடந்த 5 நாள்களுக்குப் பின்னா் கடலுக்குச் செல்வதால், அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என மீனவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.


