சித்தூர் வி. நாகையா (28 மார்ச் 1904 – 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.. நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.


