செய்துங்கநல்லூர் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் வொயர் மேன் முனியாண்டி. இவர் கடந்த 17 ந்தேதி மழை வெள்ளம் வரும் போது செய்துங்கநல்லூர் எஸ்.என்.பட்டியில் அறுந்து கிடந்த மின்வொயரால், மின்சாரம் மக்களை தாக்கி விடக்கூடாது என்று பணி செய்ய ஊருக்குள் சென்றுள்ளார். மின்சாரம் துண்டித்து வெளியே வரும் போது வெள்ளம் அவரை சூழ்ந்தது. இதனால் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டார். சுமார் 2 மணி நேரம் முள்செடிக்குள் சிக்கி உயிருக்குப் போராடிய இவரை காவல் துறையினர் காப்பாற்றினர். இவரை எஸ்.பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டி கௌரவித்தனர். இதே போல் செய்துங்கநல்லூரில் மழை வெள்ளத்தின் போதும் மின்ச்£ரம் தடையின்றி வழங்கிய இளநிலைப்பொறியாளர் சுரேஷ் கமாரும் பாராட்டு பெற்றார். முனியாண்டி மற்றும் பொறியாளர் சுரேஷ் குமார் ஆகியோரை ஊர் பொதுமக்கள் சார்பில் வானொலி பாசப்பறவைகள் வண்ணார்பேட்டை ஜெயராஜ் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உள்ளூர் பிரமுகர்கள் வசந்த், சுடலைமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன் பின் வானொலி பாசப்பறவைகள் சார்பிலும் கல்லூரி மாணவர்கள் ஆண்டூஸ் ஜெபராஜ், பிரசன்னா ஆகியோர் ஏற்பாடிலும் மக்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கப்பட்டது. இந்த பொருளையும் வண்ணார்பேட்டை ஜெயராஜ் வழங்கினார்


